Sunday, September 16, 2012

இதுல ஒண்ணும் குறைச்சல் இல்லை!

தமிழ் நாட்டுல மக்களை முட்டாள் என்று நினைத்து விட்டார் போலிருக்கு தி.மு.க. தலைவர் மு. கருணாநிதி. ஒன்னும் உருப்படியா செய்ய தெரியாது இவருக்கு. தன் மக்கள் நலனுக்காக ஒட்டு மொத்த தமிழர் நலனை அடகு வைப்பதை விட இவர் பொது வாழ்வில் சாதித்தது ஒன்றும் இல்லை. இந்த லட்சணத்தில் நேற்று (15/09/2012) விழுப்புரத்தில் நடந்த தி.மு.க. பொதுக் கூட்டத்தில் முழங்கோ முழங்கு என்று முழங்கி இருக்கிறார். அவர் முழங்கியவற்றுள் நமக்கு சிரிப்பை வரவழைத்த இரண்டு முழக்கங்களை இங்கே காணலாம்.

முழக்கம் 1. கூடங்குளம் மக்களின் அச்சத்தை போக்காமல், முன்பு ஆதரவாக தீர்மானம் போட்ட ஜெயலலிதா, இப்போது துப்பாக்கி கொண்டு தாக்குகிறார்:

இந்த முழக்கத்தின் மூலமாக இவர் தமிழகத்தில் தான் இருக்கிறாரா? என்கிற ஐயம் எழுகிறது. முன்பு ஜெயலலிதா மக்களின் அச்சத்தை போக்கும் வரை கூடங்குளம் அணுவுலை திட்டத்தை தள்ளி வைக்க சொன்னார். அவர் கருத்தை ஏற்று மத்திய அரசு குழு அமைத்து சம்மந்த பட்ட மக்களை அழைத்து பேசியது. மாநில அரசும் குழு அமைத்து சமாதானம் பேசியது. இதையெல்லாம் தள்ளிவிட்டு போராட்டக்காரர்கள் உயர்நீதிமன்றம் உச்சநீதிமன்றம் என்று சென்று தோல்வி அடைந்தவர்கள் முற்றுகை என்கிற பேரில் அணுவுலையை அணுகினால் அதைப் பார்த்து பொறுப்புள்ள மாநில அரசு சும்மா இருக்க முடியுமா? அவர்களை கலைக்க பலப்பிரயோகம் செய்ய வேண்டி வந்தால் அதையும் செய்ய வேண்டியதுதான். அதைத்தான் மாநில அரசு செய்தது. அவர்களுடன் பேச்சு வார்த்தை என்று மீண்டும் முதல் அத்தியாயத்தில் இருந்து ஆரம்பிக்க முடியாது. கருணாநிதி சொல்வது போல அவர்கள் மீது பலப்பிரயோகம் செய்யாமல் இருந்து அவர்களால் அணுவுலைக்கு ஏதேனும் தீங்கு நேர்ந்திருந்தால் இந்நேரம் இந்த பெரிய மனிதர் கையாலாகத அரசு என்று மாநில அரசை சாடியிருப்பார். தமிழக மக்கள் மத்தியில் ஜெயலலிதா பெயரும் கேட்டிருக்கும். அவ்வாறு நேர வில்லை என்கிற ஆதங்கத்தில் இப்படி முழங்கி இருக்கிறார். இதில் ஜெயலலிதாவை குறை கூறும் இவர் திராணி இருந்தால் சோனியாவின் சர்க்காரையும் குறை கூற வேண்டியதுதானே. அவ்வளவு அளவுக்கு உடலில் பயத்தை வைத்துக்கொண்டு முழக்கம் எதற்கு?

முழக்கம் 2. தம்பி மார்களை தட்டிவிட்டால் தமிழகம் ரகளை காலமாக ஆகிவிடும் என்பதால் தன்மானம் பற்றிய  ஜெயலலிதாவின் கருத்துக்கு பதில் சொல்ல விரும்ப வில்லை:

அதுவல்ல உண்மை. காரணம் பலவுண்டு. முன்பு போல தம்பிமார் யாரும் தட்டிவிட்டால் உடனே களத்தில் இறங்குவதில்லை. ஏதோ வயசான காலத்தில் புலம்புகிறார் என்று எண்ணி அவரவர் வருமனாத்தை பார்க்கிறார்கள். வழக்கு, ஜெயில் என்று வந்தால் செலவு செய்ய வேண்டாமா? தலைவர் வேறு முன்பே அவரவர் வழக்கை அவரவரே பார்த்துக்கொள வேண்டும் என்று வேறு கூறிவிட்டார். இந்நிலையில் ரகளை பண்ண எவன் வருவான்? அப்படியும் தப்பித் தவறி வந்தாலும் ஜெயலலிதா சும்மா இருக்க மாட்டார். ஏற்கெனவே ஜெயலலிதாவிடம் பட்ட அனுபவம் பல தம்பிகளுக்கு இருக்கிறது. இதுதான் உண்மை.

மேலும் தன்மானம் அற்றவர் தனக்கு தன்மானம் உள்ளது என்பதை நிரூபிக்க பதில் கூறவா முடியும். இப்படி வடிவேலு  மாதிரி வேண்டாம் வலிக்குது என்கிற ரீதியில்தான் முழங்க முடியும். தன்மானம் என்று ஒன்று இருந்திருந்தால் இவர், இலங்கைத் தமிழர்கள் மீது மத்திய சர்க்கார் ஆசியுடன் இலங்கை அரசு செய்த தாக்குதலை கண்டித்து ராஜினாமா செய்திருக்க வேண்டாம், குறைந்த பட்சம் தனது மகளை தனது ஆதரவுடன் நடக்கும் மத்திய அரசு கைது செய்ததே அப்போதாவது ராஜினாமா செய்திருப்பார். இது ஒரு நிகழ்ச்சி போதாதா தன்மானத்தை நிரூபிக்க.

இந்த தமாசுகளை நினைத்து சிரியோ சிறி என்று தமிழகம் அல்ல அனைத்து இந்தியாவே சிரிக்கிறது. 

Saturday, August 25, 2012

இலங்கைத் தமிழருக்காக ஆட்சியை இழந்தாராமாம்!

இலங்கைத் தமிழருக்காக ஆட்சியை இரண்டு முறை ஆட்சியை இழந்தாராமாம் திரு. மு. கருணாநிதி! இதை பொது மேடையில் முழங்கி இருக்கிறார்கள் ரத்தத்தின் ரத்தங்கள். நேற்று (24/08/2012) அம்பத்தூரில் நடைபெற்ற டெசோ விளக்க பொதுக்கூட்டத்தில்தான் இப்படி முழங்கி இருக்கிறார்கள். ஆட்சியை காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்ற ஒரே இலக்கிற்காக இலங்கை தமிழர்களுக்கு தங்களால் ஆனா அனைத்து துரோகங்களையும் செய்து விட்டு இன்று அதை மூடி மறைக்க பிரம்ம பிரயத்தனம் செய்கிறார்கள். ஆனால் என்ன செய்வது மக்கள் விழித்துக் கொண்டு விட்டார்களே?

ஆட்சியை இரண்டு முறை இவர்கள் இழந்தது இலங்கை தமிழருக்காக அல்ல? அது வேறு காரணங்களுக்காக என்பது சிறு குழந்தைக்கு கூட தெரிந்த விஷயம். திமுக ஆட்சி இரண்டு முறை கலைக்கப்பட்டது. 1975 இல் ஊழல் குற்றச்சாட்டிற்காக மிசா சட்டத்தின் கீழ் அன்னை இந்திரா காந்தி அரசால் டிஸ்மிஸ் செய்யப்பட்டது. அப்போது இலங்கை தமிழர் பிரச்சனை நம் மாநிலத்தை தொட வில்லை. பிறகு 1991 இல் சந்திர சேகர் பிரதமராக இருந்த பொது மீண்டும் திமுக ஆட்சி கலைக்கப்பட்டது. அப்போது இந்திய அரசு ரகசியங்களை கள்ளத்தனமாக விடுதலை புலிகளுக்கு அனுப்பிய தேச துரோக குற்றத்திற்காக டிஸ்மிஸ் செய்யப்பட்டது. ஆக இரண்டு முறையும் நாட்டு நலனுக்கு எதிரான நடவடிக்கையில் இறங்கியதற்காகதான் இவர்கள் ஆட்சியை பறி கொடுத்தார்களே அன்றி, இலங்கை தமிழன் அல்ல இந்திய தமிழன் நலனுக்காக கூட ஆட்சியை பறிகொடுக்க இவர்கள் தயார் இல்லை. 

மேலும் ராஜீவ் காந்தி படுகொலையில் திமுகவிற்கும் தொடர்பு இருப்பதாக ஜெயின் கமிஷன் அறிக்கையை சுட்டிக்காட்டி 1997 இல் அன்றைய ஐக்கிய முன்னணி சர்காரிலிருந்து திமுகவை வெளியேற்ற வேண்டும் என்று காங்கிரசு வற்புறுத்தியும் வெளியேறாமல் அதற்காக திரு. குஜ்ரால் தலைமையிலான  ஐக்கிய முன்னணி ஆட்சியே பறி போயிற்று. ஆனால் அதே காங்கிரசுடன் 2004 இல் கூட்டணி வைத்து அவர்கள் தலைமையிலேயே ஆட்சியில் இடம் பிடித்த இவர்கள் பேசுவதெல்லாம் நமக்கு வேத வாக்கு ஆகிவிடுமா என்ன? வெறும் காமிடி பீசு தான்! 

இதில் ஹைலைட் என்ன என்றால், டெசோ தீர்மானத்தை ஐ.நா. சபைக்கு அனுப்பி ஏற்க செய்வார்களாம்! வலிமை வாய்ந்த ஜனநாயக நாடுகள் போடும் தீர்மானத்தையே ஐ.நா. சபை காது கொடுத்து கேட்பதில்லை. அப்படி இருந்திருந்தால் என்றோ பாகிஸ்தான் நமக்கு கொடுத்து வரும் தொல்லைகள் அடங்கியிருக்கும். இந்த லட்சணத்தில் காமிடி பீசுகள் கொடுக்கும் தீர்மனத்தையா அங்கீகரிக்க போகிறார்கள். கவுண்டமணி ஸ்டைலில் "ஜப்பான்ல ஜாக்கி சான் கேட்டாங்கோ, அமெரிக்கவுல மைக்கேல் ஜாக்சன் கேட்டாங்கோ" என்று வேண்டுமானால் அறிக்கை விட்டுக்கொள்ள பயன்படுமே அன்றி ஊறுகாய் மடிக்க கூட உதவாது!