தமிழ் நாட்டுல மக்களை முட்டாள் என்று நினைத்து விட்டார் போலிருக்கு தி.மு.க. தலைவர் மு. கருணாநிதி. ஒன்னும் உருப்படியா செய்ய தெரியாது இவருக்கு. தன் மக்கள் நலனுக்காக ஒட்டு மொத்த தமிழர் நலனை அடகு வைப்பதை விட இவர் பொது வாழ்வில் சாதித்தது ஒன்றும் இல்லை. இந்த லட்சணத்தில் நேற்று (15/09/2012) விழுப்புரத்தில் நடந்த தி.மு.க. பொதுக் கூட்டத்தில் முழங்கோ முழங்கு என்று முழங்கி இருக்கிறார். அவர் முழங்கியவற்றுள் நமக்கு சிரிப்பை வரவழைத்த இரண்டு முழக்கங்களை இங்கே காணலாம்.
முழக்கம் 1. கூடங்குளம் மக்களின் அச்சத்தை போக்காமல், முன்பு ஆதரவாக தீர்மானம் போட்ட ஜெயலலிதா, இப்போது துப்பாக்கி கொண்டு தாக்குகிறார்:
முழக்கம் 2. தம்பி மார்களை தட்டிவிட்டால் தமிழகம் ரகளை காலமாக ஆகிவிடும் என்பதால் தன்மானம் பற்றிய ஜெயலலிதாவின் கருத்துக்கு பதில் சொல்ல விரும்ப வில்லை:
மேலும் தன்மானம் அற்றவர் தனக்கு தன்மானம் உள்ளது என்பதை நிரூபிக்க பதில் கூறவா முடியும். இப்படி வடிவேலு மாதிரி வேண்டாம் வலிக்குது என்கிற ரீதியில்தான் முழங்க முடியும். தன்மானம் என்று ஒன்று இருந்திருந்தால் இவர், இலங்கைத் தமிழர்கள் மீது மத்திய சர்க்கார் ஆசியுடன் இலங்கை அரசு செய்த தாக்குதலை கண்டித்து ராஜினாமா செய்திருக்க வேண்டாம், குறைந்த பட்சம் தனது மகளை தனது ஆதரவுடன் நடக்கும் மத்திய அரசு கைது செய்ததே அப்போதாவது ராஜினாமா செய்திருப்பார். இது ஒரு நிகழ்ச்சி போதாதா தன்மானத்தை நிரூபிக்க.
இந்த தமாசுகளை நினைத்து சிரியோ சிறி என்று தமிழகம் அல்ல அனைத்து இந்தியாவே சிரிக்கிறது.