இன்றையதினம் (31/10/2011) உலகின் எழுநூறாவது கோடி குழந்தை, நர்கிஸ் உ.பி. தலைநகர் லக்னோவை சார்ந்த வினிதா-அஜய் தம்பதியினருக்கு பிறந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. இது ஒரு நிமித்தமான (Symbolic) அறிவிப்புத்தான் என்றாலும், இத்தகைய செய்திகளை கேட்கும் பொழுது நமக்கு சிரிப்புத்தான் வருகிறது.
ஏதோ ஒரு கணக்கீட்டின் அடிப்படையில் ஒரு நிமிடத்திற்கு இந்தியாவில் இத்தனை குழந்தைகள் பிறக்கின்றன என்று சொல்கிறார்கள். அதில் எந்த குழந்தை எத்தனையாவது என்று யாரும் தேடி கண்டு பிடிப்பதில்லை. பொத்தம் பொதுவாக சொல்வதுதான். இப்படிப்பட்ட நிலையில் லக்னோவை சார்ந்த இந்த குழந்தைதான் எழுநூறாவது கோடி என்று எப்படித்தான் சொல்கிறார்களோ? இதை நாம் கண்ணை மூடிக்கொண்டு நம்ப வேண்டுமாம். இதில் என்ன பகுத்தறிவு உள்ளதோ? எது எப்படியோ அந்த குழந்தை ஒரு ஸ்டார் அந்தஸ்தை பெற்றுவிட்டது. "நர்கிஸ் நூறாண்டு காலம் வாழ்க"
No comments:
Post a Comment