ஆட்சியை இரண்டு முறை இவர்கள் இழந்தது இலங்கை தமிழருக்காக அல்ல? அது வேறு காரணங்களுக்காக என்பது சிறு குழந்தைக்கு கூட தெரிந்த விஷயம். திமுக ஆட்சி இரண்டு முறை கலைக்கப்பட்டது. 1975 இல் ஊழல் குற்றச்சாட்டிற்காக மிசா சட்டத்தின் கீழ் அன்னை இந்திரா காந்தி அரசால் டிஸ்மிஸ் செய்யப்பட்டது. அப்போது இலங்கை தமிழர் பிரச்சனை நம் மாநிலத்தை தொட வில்லை. பிறகு 1991 இல் சந்திர சேகர் பிரதமராக இருந்த பொது மீண்டும் திமுக ஆட்சி கலைக்கப்பட்டது. அப்போது இந்திய அரசு ரகசியங்களை கள்ளத்தனமாக விடுதலை புலிகளுக்கு அனுப்பிய தேச துரோக குற்றத்திற்காக டிஸ்மிஸ் செய்யப்பட்டது. ஆக இரண்டு முறையும் நாட்டு நலனுக்கு எதிரான நடவடிக்கையில் இறங்கியதற்காகதான் இவர்கள் ஆட்சியை பறி கொடுத்தார்களே அன்றி, இலங்கை தமிழன் அல்ல இந்திய தமிழன் நலனுக்காக கூட ஆட்சியை பறிகொடுக்க இவர்கள் தயார் இல்லை.
இதில் ஹைலைட் என்ன என்றால், டெசோ தீர்மானத்தை ஐ.நா. சபைக்கு அனுப்பி ஏற்க செய்வார்களாம்! வலிமை வாய்ந்த ஜனநாயக நாடுகள் போடும் தீர்மானத்தையே ஐ.நா. சபை காது கொடுத்து கேட்பதில்லை. அப்படி இருந்திருந்தால் என்றோ பாகிஸ்தான் நமக்கு கொடுத்து வரும் தொல்லைகள் அடங்கியிருக்கும். இந்த லட்சணத்தில் காமிடி பீசுகள் கொடுக்கும் தீர்மனத்தையா அங்கீகரிக்க போகிறார்கள். கவுண்டமணி ஸ்டைலில் "ஜப்பான்ல ஜாக்கி சான் கேட்டாங்கோ, அமெரிக்கவுல மைக்கேல் ஜாக்சன் கேட்டாங்கோ" என்று வேண்டுமானால் அறிக்கை விட்டுக்கொள்ள பயன்படுமே அன்றி ஊறுகாய் மடிக்க கூட உதவாது!
No comments:
Post a Comment