தமிழ் நாட்டுல மக்களை முட்டாள் என்று நினைத்து விட்டார் போலிருக்கு தி.மு.க. தலைவர் மு. கருணாநிதி. ஒன்னும் உருப்படியா செய்ய தெரியாது இவருக்கு. தன் மக்கள் நலனுக்காக ஒட்டு மொத்த தமிழர் நலனை அடகு வைப்பதை விட இவர் பொது வாழ்வில் சாதித்தது ஒன்றும் இல்லை. இந்த லட்சணத்தில் நேற்று (15/09/2012) விழுப்புரத்தில் நடந்த தி.மு.க. பொதுக் கூட்டத்தில் முழங்கோ முழங்கு என்று முழங்கி இருக்கிறார். அவர் முழங்கியவற்றுள் நமக்கு சிரிப்பை வரவழைத்த இரண்டு முழக்கங்களை இங்கே காணலாம்.
முழக்கம் 1. கூடங்குளம் மக்களின் அச்சத்தை போக்காமல், முன்பு ஆதரவாக தீர்மானம் போட்ட ஜெயலலிதா, இப்போது துப்பாக்கி கொண்டு தாக்குகிறார்:

இந்த முழக்கத்தின் மூலமாக இவர் தமிழகத்தில் தான் இருக்கிறாரா? என்கிற ஐயம் எழுகிறது. முன்பு ஜெயலலிதா மக்களின் அச்சத்தை போக்கும் வரை கூடங்குளம் அணுவுலை திட்டத்தை தள்ளி வைக்க சொன்னார். அவர் கருத்தை ஏற்று மத்திய அரசு குழு அமைத்து சம்மந்த பட்ட மக்களை அழைத்து பேசியது. மாநில அரசும் குழு அமைத்து சமாதானம் பேசியது. இதையெல்லாம் தள்ளிவிட்டு போராட்டக்காரர்கள் உயர்நீதிமன்றம் உச்சநீதிமன்றம் என்று சென்று தோல்வி அடைந்தவர்கள் முற்றுகை என்கிற பேரில் அணுவுலையை அணுகினால் அதைப் பார்த்து பொறுப்புள்ள மாநில அரசு சும்மா இருக்க முடியுமா? அவர்களை கலைக்க பலப்பிரயோகம் செய்ய வேண்டி வந்தால் அதையும் செய்ய வேண்டியதுதான். அதைத்தான் மாநில அரசு செய்தது. அவர்களுடன் பேச்சு வார்த்தை என்று மீண்டும் முதல் அத்தியாயத்தில் இருந்து ஆரம்பிக்க முடியாது. கருணாநிதி சொல்வது போல அவர்கள் மீது பலப்பிரயோகம் செய்யாமல் இருந்து அவர்களால் அணுவுலைக்கு ஏதேனும் தீங்கு நேர்ந்திருந்தால் இந்நேரம் இந்த பெரிய மனிதர் கையாலாகத அரசு என்று மாநில அரசை சாடியிருப்பார். தமிழக மக்கள் மத்தியில் ஜெயலலிதா பெயரும் கேட்டிருக்கும். அவ்வாறு நேர வில்லை என்கிற ஆதங்கத்தில் இப்படி முழங்கி இருக்கிறார். இதில் ஜெயலலிதாவை குறை கூறும் இவர் திராணி இருந்தால் சோனியாவின் சர்க்காரையும் குறை கூற வேண்டியதுதானே. அவ்வளவு அளவுக்கு உடலில் பயத்தை வைத்துக்கொண்டு முழக்கம் எதற்கு?
முழக்கம் 2. தம்பி மார்களை தட்டிவிட்டால் தமிழகம் ரகளை காலமாக ஆகிவிடும் என்பதால் தன்மானம் பற்றிய ஜெயலலிதாவின் கருத்துக்கு பதில் சொல்ல விரும்ப வில்லை:

அதுவல்ல உண்மை. காரணம் பலவுண்டு. முன்பு போல தம்பிமார் யாரும் தட்டிவிட்டால் உடனே களத்தில் இறங்குவதில்லை. ஏதோ வயசான காலத்தில் புலம்புகிறார் என்று எண்ணி அவரவர் வருமனாத்தை பார்க்கிறார்கள். வழக்கு, ஜெயில் என்று வந்தால் செலவு செய்ய வேண்டாமா? தலைவர் வேறு முன்பே அவரவர் வழக்கை அவரவரே பார்த்துக்கொள வேண்டும் என்று வேறு கூறிவிட்டார். இந்நிலையில் ரகளை பண்ண எவன் வருவான்? அப்படியும் தப்பித் தவறி வந்தாலும் ஜெயலலிதா சும்மா இருக்க மாட்டார். ஏற்கெனவே ஜெயலலிதாவிடம் பட்ட அனுபவம் பல தம்பிகளுக்கு இருக்கிறது. இதுதான் உண்மை.
மேலும் தன்மானம் அற்றவர் தனக்கு தன்மானம் உள்ளது என்பதை நிரூபிக்க பதில் கூறவா முடியும். இப்படி வடிவேலு மாதிரி வேண்டாம் வலிக்குது என்கிற ரீதியில்தான் முழங்க முடியும். தன்மானம் என்று ஒன்று இருந்திருந்தால் இவர், இலங்கைத் தமிழர்கள் மீது மத்திய சர்க்கார் ஆசியுடன் இலங்கை அரசு செய்த தாக்குதலை கண்டித்து ராஜினாமா செய்திருக்க வேண்டாம், குறைந்த பட்சம் தனது மகளை தனது ஆதரவுடன் நடக்கும் மத்திய அரசு கைது செய்ததே அப்போதாவது ராஜினாமா செய்திருப்பார். இது ஒரு நிகழ்ச்சி போதாதா தன்மானத்தை நிரூபிக்க.
இந்த தமாசுகளை நினைத்து சிரியோ சிறி என்று தமிழகம் அல்ல அனைத்து இந்தியாவே சிரிக்கிறது.
No comments:
Post a Comment