Saturday, May 7, 2011

பசுமைத் தமாசு

 04/05/2011 அன்று ஐ.பி.எல். கிரிக்கெட் ஆட்டம் ஆட சென்னை வந்திருந்த தோனி ஒரு ஓட்டலில் தங்கியிருந்தார். அவர் தங்கியிருந்த ஓட்டல் எதிரில் பசுமைத்தாயகம் என்ற அமைப்பு கண்டன போராட்டம் ஒன்றை நடத்தினார்கள். காரணம் என்ன? தோனி இந்தியாவுக்காக சிறப்பாக ஆடவில்லையா? மேட்ச் பிக்சிங் ஏதாவது செய்து நாட்டுக்கு தலைக்குனிவு ஏற்படுத்தினார? இல்லை வேறு ஏதாவது சட்ட விரோத தேச விரோத செயல்களில் ஈடுபட்டார? எதுவுமே இல்லை? பின் எதற்காக இந்த போராட்டம்? பசுமைத்தயகத்தினர் சொன்ன காரணத்தை கேட்டால் சிரிப்புத்தான் வரும். "தோனி மது பான விளம்பரத்தில் நடித்தார். அதைக்கண்டித்துத்தான் இந்த போராட்டம்" என்றார்கள் கொஞ்சம் கூட கூச்சமோ வெட்கமோ இல்லாமல். 

சரி. யார் இந்த பசுமைத்தாயகத்தினர். சமூக நீதிப்போராளி, மரம்வெட்டியார் கட்சியை சார்ந்த அமைப்புத்தான் இது. இதன் தலைவியாக மரம்வேட்டியாரின் மருமகள்தான் திகழ்கிறார். இது போன்ற போராட்டங்களை நடத்தி அவ்வப்போது தாங்களும் பொது சேவை செய்வதாக அறிவித்துக்கொள்வார்கள். அவ்வளவுதான். தமிழகத்தில் பசுமை சுருங்கி வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதை பார்த்தாலே புரியும் இவர்களின் செயல் பாடு எந்த நிலையில் உள்ளது என்று. 

அவர்கள் மது பானத்திற்கெதிராகத்தானே போராடுகிறார்கள் அதை ஏன் குறை கூற வேண்டும். அதை நாம் குறை கூறவில்லை. இவர்களுக்கு என்ன தகுதி உள்ளது என்றுதான் கேட்கிறோம். தோனி மது பான விளம்பரத்தில் நடித்தது ஒன்றும் பெரிய குற்றமல்லவே. இந்திய நாட்டின் சட்டதிட்டங்களுக்குட்பட்டுத்தானே அவர் நடிக்கிறார். அனால் இந்த இயக்கத்தின் தலைவியின் மாமனார் கட்சி என்ன செய்கிறது. தமிழகத்தில் மது பானத்தை பேரல் பேரலாக வியாபாரம் செய்யும் கட்சியுடன் தானே கூட்டு வைத்துக்கொண்டிருக்கிறார். அத்தகைய ஆட்சியை புகழோ புகழ் என்று புகழ்ந்து தேர்தலில் ஓட்டு கேட்டாரே! அவரை கண்டித்து ஆரபாட்டம் நடத்த வேண்டியதுதானே? செய்திருந்தால் தெரிந்திருக்கும் இவர்களுடைய கதி. பாவம் தோனி என்னவென்றே புரியாமல் சேப்பாக்கத்தில் விளையாடிவிட்டு சென்றார். 

இப்படி இவர்கள் செய்வதும் இவர்களுக்கும் புரியாது, அடுத்தவனுக்கும் விளங்காது. போராட வேண்டிய இடத்திலும் போராட மாட்டார்கள். கூடாத இடத்தில் பயங்கரமாக குரல் கொடுப்பார்கள். இவர்கள் எல்லாம்தான் தமிழின போராளிகள். சமுதாய சிங்கங்கள். தமிழனை கேவலப்படுத்த இவர்களுக்கு இணை இவர்கள்தான்.  

No comments:

Post a Comment