Wednesday, June 22, 2011

இராமனுக்கு தலைக்குனிவு

முத்தமிழ் வித்தவர், தமிழின துடைப்பாளி சமீபத்தில் முத்தொன்றை உதித்திருக்கிறார். இராமன் ஆட்சியை இழந்த பின்புதான் தாடகையை வாதம் செய்தான் என்று அருளியிருக்கிறார். இதன் மூலம் இவர் தம் இயக்கத்தின் கொள்கையை நாடு ரோட்டில் தோலுரித்து காட்டியதுமில்லாமல் தமக்கு இராமாயணமும் தெரியாது என்பதை பறை சாற்றியிருக்கிறார். 

இராமாயணத்தில், விசுவாமித்திர மகாமுனிவர் இராமனையும் இலக்குவனையும் தமது வேள்வியை காக்க வேண்டி மாமன்னர் தயரதனிடமிருந்து கேட்டு அழைத்து செல்கிறார். செல்லும் வழியில் தாடகை என்ற அரக்கர் இனத்து பெண்மணி விசுவாமித்திரரின் வேள்வியை சிதைக்கும் எண்ணத்தோடு வருகிறாள். அவளை குருவின் அணையை ஏற்று வாதம் செய்கிறார் சக்கரவர்த்தி திருமகனார். இது இராமன் இளவரசனாக இருந்த பொழுது நடந்தது. இராமனுக்கு திருமணம் நடைபெறும் முன்பு, தயரதன் இராமனுக்கு முடி சூட்ட முடிவு செய்ய இருந்த பல வருடங்களுக்கு முன்பு நடந்தது. இங்கே இராமன் முடியிழந்தான் என்ற பேச்சே எழவில்லை.  

அடுத்து தமிழை பிழைப்பாக கொண்டிருப்பவரின் கொள்கை இராமன் ஆரியன் என்பது. இராவணனும் அவனது சுற்றத்தினரும் திராவிடர்கள் என்பது. இதை விளக்கவே இராவண லீலாவை நடத்திய கூட்டத்தினர்தான் இவர்கள். இப்படியிருக்க இவர் தன்னை இராமனாக உருவகம் செய்து கொண்டிருப்பது பெரிய விந்தைதான். அதுவும் எதிரில் இருக்கும் பார்ப்பன பெண்மணியை தாடகையாக உவமை கூறியிருப்பது, தம் மகள் சிறையில் இருக்கும் வருத்தத்தை மறைக்க கூறியிருக்கும் நயவஞ்சக சொற்கள்தான். தனக்கென்றால் இராமாயணத்தையும் அதுவும் அரைகுறையாக புரிந்துகொண்டு விளக்கம் கூறுவார். பிறருக்கேன்றால் அவர்களை கேலி கிண்டல் செய்து இரண்டு பக்க கட்டுரை வரைவார். 

பாவம் அவர் என்ன செய்வார். "மக்கள் நலம் மக்கள் நலம் என்று சொல்லுவார் தம் மக்கள் நலம் ஒன்றே தான் மனதில் கொள்ளுவார்" என்று புரட்சி தலைவர் ஒரு திரைப்படத்தில் பாடியதற்கேற்பதானே வாழ்ந்து வருகிறார். அப்படித்தான் புலம்புவார். வரும் காலங்களில் அவர் இன்னும் என்னென்ன சந்திக்க வேண்டி இருக்கின்றதோ. அந்திம கால திருதராட்டிரன் போன்ற நிலைதான் அவருக்கு. கொள்ளை அடித்து சொத்து சேர்த்த காலங்களில் ஏற்பட்ட மகிழ்ச்சியை விட கொடுமையான இகழ்ச்சியையும் துயரத்தையும் சந்திக்க நேர்ந்து விட்டது. 

No comments:

Post a Comment