Friday, August 5, 2011

வசதியான வார்த்தைகள் (Sub-judice)

 இந்த அரசியல் கட்சி தலைவர்கள் பொதுவாக பயன் படுத்தும் வார்த்தை 'வழக்கு நீதி மன்றத்திலிருக்கிறது. அது பற்றி கருத்தை தெரிவிக்க இயலாது' என்பதாகும். அனால் இவர்களுக்கு வேண்டும்பொழுது என்னெவெல்லாமோ கருத்து தெரிவிப்பார்கள். உதாரணத்துக்கு சிலவற்றை பாருங்கள். இதில் யாருக்கும் வெட்கமில்லை. 

1. ஜெயலலிதா, சமீபத்தில் புதுதில்லியில் உள்துறை அமைச்சர் சிதம்பரத்தின் தேர்தல் வெற்றி குறித்து பெட்டி அளித்திருந்தார். அதற்கு கருத்து தெரிவித்த சிதம்பரம், விஷயம் நீதி மன்றத்திலிருப்பதாக கூறி நழுவிக்கொண்டுவிட்டார். 

2. தானைத்தலைவரும் அவர்கள் கூட்டமும் அவ்வப்பொழுது பொன்மொழிகளை உதிர்ப்பார்கள். 2G வழக்கு சம்பந்தமாக யாராவது ஏதாவது கேட்டால் வழக்கு நீதி மன்றத்திலிருக்கிறது என்று கூறி தப்பித்துக்கொள்ளும் இவர்கள், ஜெயலலிதா மீதான பெங்களூரு நீதி மன்ற வழக்கை பற்றி மட்டும் ஏகத்தும் பெட்டி தருவார்கள். வழக்கு சம்பந்தப்பட்டவர் வாய்தா வாங்குவது என்பது நம் நாட்டில் ஆண்டாண்டு காலம் நடந்து வரும் சடங்கு. வாய்தா கேட்பது கட்சிக்காரர்களின் உரிமை அதை வழங்குவதும் மறுப்பதும் நீதி மன்றத்தின் உரிமை. இதை குறை சொல்ல இவர்களுக்கு என்ன தகுதி இருக்கிறது. அப்போது மட்டும் இவர்கள் வழக்கு நீதி மன்றத்திலிருக்கிறது என்று கூறுவதில்லை. 

3. சமச்சீர் கல்வி என்று அரைகுறை திட்டத்தை அறிமுக படுத்தி தமிழக மாணவர்களின் எதிர் காலத்தை சூறையாடிய இவர்கள் நேற்று (04/08/2011) நாடாளுமன்றத்தில் கூச்சலிட்டிருக்கிறார்கள். உச்ச நீதி மன்றத்தில் வழக்கு நிலுவையிலிருக்கும்போது நாடாளு மன்றத்தில் எழுப்புவது தவறு என்று இவர்களுக்கு தெரியாதா. அப்போது வழக்கு நீதி மன்றத்திலிருக்கிறது என்று விட்டு செல்ல வேண்டியதுதானே?

No comments:

Post a Comment