ராஜீவை கொன்றவர்கள் சிறிதும் கருணையில்லாமல்தான் அந்த குற்றத்தை செய்திருக்கிறார்கள். தவிர இந்நாட்டின் முன்னாள் பிரதமரைக் கொன்று இந்நாட்டின் இறையாண்மைக்கு சவால் விட்டவர்கள். இதில் தமிழ் பற்று இனப்பற்று என்று உணர்ச்சி பூர்வமான விஷயங்களுக்கு இடமில்லை. ராஜீவை கொன்ற கூட்டத்தினர் அதற்கு முன்பு எண்ணற்ற தமிழ் தலைவர்களை கொன்றிருக்கிறார்கள். தங்கள் தலைமைக்கு சவால் விடும் அளவிற்கு இருக்கிற தீவிர மற்றும் மிதவாத தமிழ் போராளிகளை ஈவிரக்கமின்றி கொன்றவர்கள். இவர்களுக்கு கருணை காட்ட வேண்டுமாம். இங்குள்ள சாத்தான்கள் வேதம் ஓதுகிறார்கள். இதில் என்ன பெரிய தமாசு என்றால் நம்முடைய தமிழ் வித்தவர், "சோனியா காந்தி இதில் தலையிட்டு அந்த மூவரையும் காக்க வேண்டும்" என்கிறார். எப்படி இருக்கிறது கதை. தன் மகள் சிறையில் வாடுவதையே பொறுக்காத இந்த தமிழின துரோகத்தலைவர் கணவனை இழந்து வாடும் பெண்மணி கணவனை கொன்றவர்களுக்கு இறக்கம் காட்ட வேண்டுகிறார். இவர் மீண்டும் சிலைவைத்து சிறப்பு செய்த கண்ணகிகூட கணவனை கொன்ற மன்னனை மற்றுமல்லாமல் அவன் தலை நகரையே தீக்கிரையாக்கினாள். அவளே காட்டாத இரக்கத்தை சோனியா காட்ட வேண்டுமென்பது கேட்ககூட சகிக்கவில்லையே?
ராஜீவை இந்த கொலையாளிகள் கொன்றதை தட்டிக்கேட்காத கூட்டம், அவருடைய கொலையை புகழ்ந்த கூட்டம், கொலைக்குற்றவாளிகளை புகழ்ந்து தள்ளிய கூட்டம், தமிழின துடைப்பாளி கொலைக்காரன் ராஜபக்சேவை நேரில் சந்தித்து புகழ்ந்து, கைகுலுக்கி, பரிசுப்பொருள் பெற்று வந்து, இலங்கையில் தமிழருக்கு எந்த அநியாயமும் நடைபெறவில்லை என்று அநியாயத்துக்கு பேட்டிக்கொடுத்த கூட்டம் இன்று ராஜீவ் கொலையாளிகளுக்கு மன்னிப்பு கோருவது மனித இனத்திற்கே விரோதமான செயல் என்பது ஊரறியும்.
இவர்கள் தமாசுகளை நீங்கள் நாள்தோறும் படியுங்கள், சிந்தியுங்கள் பிறகு வாய்விட்டு சிரியுங்கள். சினிமாவில் காமெடியனுக்கு சிறப்பான பாத்திரம் அளிக்க மாட்டார்கள். ஆனால் அவர்கள் இல்லையென்றால் சினிமா சிறப்பாக இருக்காது, மக்கள் கூட்டமும் வராது. அது போன்று இன்றைய அரசியலையும் நாம் ரசிப்பதற்கு இத்தகைய கோமாளிகள் தேவை. தொடர்ந்து சிரியுங்கள்.
No comments:
Post a Comment