பேச்சு பேச்சா இருக்கட்டும், வானா வலிக்குது, ஹய்யோ ஹய்யோ, வரும் வராது, மாப்பு வெச்சுட்டாண்டா ஆப்பு, என்ன இது சின்ன புள்ள தனமா இருக்கு, வட போச்சே, சிங் இந்த ரெயின், கடுப்பேத்தறார் மை லார்ட், போன்று எத்தனையோ வார்த்தைகள் இன்று அன்றாடம் மக்கள் நடுவில் கையாளப்படுகின்றன. அந்த அளவிற்கு மக்கள் அவரை பெரிதும் விரும்பினார்கள். எத்தனையோ நடிகர்கள் தோன்றி மறைந்தாலும், பல பிரபலங்கள் நகைச்சுவை படையலே இட்டிருந்தாலும், வடிவேலுவை மக்கள் உள்ளத்தில் ஏந்தியது போல வேறு எந்த கலைஞனுக்கும் இத்தகைய பதவியை தந்ததில்லை. கதாநாயக கதாபாத்திரங்களிலும், குணச்சித்திர வேடங்களிலும் பலதரப்பட்ட பாத்திரங்களுக்கு பொருத்தமாக நடிகர் திலகம் திகழ்ந்தார் எனில், நகைச்சுவை உலகில் அத்தகைய பாத்திரத்திற்கு ஏற்றவராக திகழும் ஒரே நகைச்சுவை கலைஞன் வடிவேலு மட்டுமே. அரசன் முதல் ஆண்டி வரை, கல்லூரி மாணவன் முதல் வெட்டியான் வரை என்று சகல வேடங்களுக்கும் பொருத்தமான ஒரே ஆள் இன்றைய உலகில் வடிவேலுதான். அவருடைய சேட்டைகள் (Body Language) மட்டுமே திரையில் தோன்றிய உடனே குபீர் சிரிப்பையும் மக்களிடத்தில் ஒரு எதிர்ப்பார்ப்பையும் தோற்றுவிப்பதாய் அமைந்து விடுகின்றன. அவர் ஏற்ற இறக்கத்துடன் வசனங்களை பொழியும் பாணியே தனி. அதிலும் மனமொழி (உதட்டசைவின்றி பின்புலமாக ஒலிப்பது) மற்றும் முனகல் தனி ரகம்.
Monday, October 24, 2011
வடி(யா)வேலு!
Wednesday, October 19, 2011
நல்ல பெயரை வாங்க வேண்டும்!
Thursday, October 6, 2011
யார் காரணம்!
எப்படி பேசுவார்கள்? இத்தனை நாட்கள் உள்ளாட்சி முழுவதும் இவர்கள் கட்டுப்பாட்டில்தானே இருந்தது. இவர்களின் கட்சியினர் கொள்ளையடித்து உள்ளாட்சியை போண்டியாக்கி வைத்து விட்டார்களே! அதை சொல்லியா பிரச்சாரம் செய்ய முடியும்? கால்நடையாகவோ, சைக்கிளிலோ சென்றவநேல்லாம் கவுன்சிலராகி இன்று சுமோ, போலேரோ போன்ற வாகனங்களில் உலா வருவது வாக்களிக்கும் மக்களின் கண்களை உறுத்தாமல் இல்லை. இவர்கள் பிரச்சாரத்தை நம்பி மோசம் போகக்கூடிய நிலையில் மக்கள் இல்லை.
அரசு பதவி ஏற்றவுடன் சமச்சீர் கல்வியை இந்தாண்டு நிறுத்தி அமைச்சரவை முடிவு செய்தது. கல்வித்திட்டத்தில் உள்ள குறைபாடுகளை களைந்து அடுத்த ஆண்டு முதல் நடைமுறை படுத்தப்படும் என்று அறிவித்தது. ஜெயலலிதாவை எதிர்ப்பதையே கொள்கையாக கொண்ட இவர்களுக்கு ஒரு வருடம் கூட பொறுக்க முடியவில்லை. நீதிமன்றத்திற்கு சென்றார்கள். நம் நாட்டில் நீதிமன்றத்திற்கு சென்றால் உடனடியாகவா முடிவு கிடைக்கும்? நீதிமன்றத்தில் முடிவு வந்தபின் மேல்முறையீட்டில் உயர்நீதி மன்றம் சென்றது அரசு. அதையும் குறை கூறினார்கள். மேல்முறையீட்டு உரிமை இருக்கும் பொழுது அதை பயன்படுத்துவது எப்படி தவறாகும். உச்சநீதிமன்றமும் சமச்சீர் கல்வியை அமல் படுத்தவேண்டும் என்று உத்தரவிட்டது. அதை உடனடியாக நடைமுறை படுத்திவிட்டது அரசு. இதில் அரசின் காலதாமதம் எதுவும் இல்லை. காலதாமதத்திற்கு காரணம் எதிர் கட்சிகள் நீதிமன்றத்திற்கு சென்றதுதான். செல்லாமல் இருந்திருந்தால் இந்த ஆண்டு காலதாமதமில்லாமல் வகுப்புகள் நடந்திருக்கும். குறைகளை களைந்து அடுத்த ஆண்டு சிறந்த கல்வி திட்டம் அமல் படுத்தப்பட்டிருக்கும். இதில் யாருக்கும் எந்த இழப்பும் ஏற்பட்டிருக்காது.
Saturday, August 27, 2011
ராஜீவ் கொலையாளிகளை விடுவிக்கணுமாம்!
ராஜீவை கொன்றவர்கள் சிறிதும் கருணையில்லாமல்தான் அந்த குற்றத்தை செய்திருக்கிறார்கள். தவிர இந்நாட்டின் முன்னாள் பிரதமரைக் கொன்று இந்நாட்டின் இறையாண்மைக்கு சவால் விட்டவர்கள். இதில் தமிழ் பற்று இனப்பற்று என்று உணர்ச்சி பூர்வமான விஷயங்களுக்கு இடமில்லை. ராஜீவை கொன்ற கூட்டத்தினர் அதற்கு முன்பு எண்ணற்ற தமிழ் தலைவர்களை கொன்றிருக்கிறார்கள். தங்கள் தலைமைக்கு சவால் விடும் அளவிற்கு இருக்கிற தீவிர மற்றும் மிதவாத தமிழ் போராளிகளை ஈவிரக்கமின்றி கொன்றவர்கள். இவர்களுக்கு கருணை காட்ட வேண்டுமாம். இங்குள்ள சாத்தான்கள் வேதம் ஓதுகிறார்கள். இதில் என்ன பெரிய தமாசு என்றால் நம்முடைய தமிழ் வித்தவர், "சோனியா காந்தி இதில் தலையிட்டு அந்த மூவரையும் காக்க வேண்டும்" என்கிறார். எப்படி இருக்கிறது கதை. தன் மகள் சிறையில் வாடுவதையே பொறுக்காத இந்த தமிழின துரோகத்தலைவர் கணவனை இழந்து வாடும் பெண்மணி கணவனை கொன்றவர்களுக்கு இறக்கம் காட்ட வேண்டுகிறார். இவர் மீண்டும் சிலைவைத்து சிறப்பு செய்த கண்ணகிகூட கணவனை கொன்ற மன்னனை மற்றுமல்லாமல் அவன் தலை நகரையே தீக்கிரையாக்கினாள். அவளே காட்டாத இரக்கத்தை சோனியா காட்ட வேண்டுமென்பது கேட்ககூட சகிக்கவில்லையே?
ராஜீவை இந்த கொலையாளிகள் கொன்றதை தட்டிக்கேட்காத கூட்டம், அவருடைய கொலையை புகழ்ந்த கூட்டம், கொலைக்குற்றவாளிகளை புகழ்ந்து தள்ளிய கூட்டம், தமிழின துடைப்பாளி கொலைக்காரன் ராஜபக்சேவை நேரில் சந்தித்து புகழ்ந்து, கைகுலுக்கி, பரிசுப்பொருள் பெற்று வந்து, இலங்கையில் தமிழருக்கு எந்த அநியாயமும் நடைபெறவில்லை என்று அநியாயத்துக்கு பேட்டிக்கொடுத்த கூட்டம் இன்று ராஜீவ் கொலையாளிகளுக்கு மன்னிப்பு கோருவது மனித இனத்திற்கே விரோதமான செயல் என்பது ஊரறியும்.
இவர்கள் தமாசுகளை நீங்கள் நாள்தோறும் படியுங்கள், சிந்தியுங்கள் பிறகு வாய்விட்டு சிரியுங்கள். சினிமாவில் காமெடியனுக்கு சிறப்பான பாத்திரம் அளிக்க மாட்டார்கள். ஆனால் அவர்கள் இல்லையென்றால் சினிமா சிறப்பாக இருக்காது, மக்கள் கூட்டமும் வராது. அது போன்று இன்றைய அரசியலையும் நாம் ரசிப்பதற்கு இத்தகைய கோமாளிகள் தேவை. தொடர்ந்து சிரியுங்கள்.
Subscribe to:
Posts (Atom)